1952 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்று மகிழ்ந்திருந்த காலம். ஆனால் பெண்கள் கல்வி விடுதலை பெறாத காலம். இத்தகு சுழலில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கோவை மாவட்டம் –இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் இயற்கை அன்னையின் எழில் சூழ்ந்த உடுமலைப்பேட்டையில் தெய்வத்திரு கோ. வெ. கோவிந்தசாமி அய்யா அவர்களால் தொடங்கப்பெற்றது தான் எம் சீர்மிகு கல்லூரியான ஸ்ரீ.ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி. தொடங்கப்பட்ட காலம் முதல் எம் துறை பகுதி -1 தமிழ்ப்பயிற்றுவிக்கும் துறையாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்துறை சார்ந்த பேராசிரியர் ஆ.ரா. இந்திரா அவர்கள் 1979 முதல் 1986 வரை இக்கல்லூரி முதல்வராக பொறுபேற்றிருந்தார். அன்னார் கல்லூரிக்கென பாடல் எழுதி தாமே இசையமைத்துக் கொடுத்தார். இன்றுவரை இப்பாடல் எம் கல்லூரி அரங்கத்தில் ஒலித்துகொண்டிருக்கிறது. கிராமப்புற பெண்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற நிறுவனரின் உயரிய நோக்கத்தை ஏற்று இன்று வரை எம் துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்த்துறை சார்பில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் இளஞ்சுடர் என்ற மாணவ இதழ் 2014 - ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
2018 - 2019 ஆம் கல்வியாண்டு முதல் இலக்கிய வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு மாணவியரின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.