கல்லூரி தொடங்கப்பட்ட 1952–ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறை செயல்பட்டுக் கொண்டு வருகிறது.1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறை தன்னிதிப்பிரிவாக விரிவுபடுத்தப்பட்டுபகுதி-I தமிழ் வகுப்புகளுக்கு தனித்துறையாக இயங்கி வருகிறது. தொடர்ந்து 2014-ஆம் கல்வியாண்டில் இளங்கலை தமிழ் இலக்கியம் துவங்கப்பட்டது.இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவியருக்கு தமிழ்மொழியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் விதமாக பாடத்திட்டங்களை வரையறுத்து, அதன் வாயிலாக சவால்கள் நிறைந்த சமூகத்தை எதிர்கொள்ளத் தரமான வாழ்க்கைக் கல்வியை வழங்கி வருகின்றது. தரமான பேராசிரியர்களைக் கொண்டு சிறந்த கல்வியை போதிப்பதோடு போட்டித் தேர்வுகளுக்கு மாணவியரை ஆயத்தப்படுத்துவதிலும் அறச் சிந்தனையுடன் கூடிய ஆன்மீக உணர்வையூட்டி சிறந்த பெண்மணிகளாக உருவாக்குவதிலும் முனைப்போடு செயல்பட்டுவருகிறது.